என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே
3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே
en koodave irum oh Yesuvae
neerillaamal naan vaala mutiyaathu
en pakkaththilae irum o Yesuvae
neerillamaal naan vaala mutiyaathu (2)
1.irulaana vaalkkaiyilae velichcham aaneerae
uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2)
en velichcham neerae en jeevanum neerae
enakkellaamae neengathaanappaa (2) – en koodavae
2.kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae
kaayappatta naeraththil neer thakappanaaneerae
en ammaavum neerae en appaavum neerae
enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae
3.viyaathiyin naeraththil vaiththiyaraaneerae
sothanai naeraththil nannparaanirae (2)
en vaiththiyar neerae en nannparum neerae
enakkellaamae neenga thaanappaa (2) – en koodavae